India
“பட்டாசு வெடித்த ஆத்திரத்தில் குழந்தைகளை நோக்கி ஆசிட் வீச்சு.. 2 பெண்கள் படுகாயம்” : என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்திற்குட்பட்ட கைலாஷ்பூரி பகுதியில் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் நபர், பட்டாசு வெடிக்கக் கூடாது என குழந்தைகளிடம் கூறியுள்ளார்.
ஆனால் குழந்தைகள் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஆசிட் பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீது வீசினார். அப்போது குழந்தைகள் அங்கிருந்து தப்பிச் சென்றதால், அருகே அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீது ஆசிட் பட்டதில் அவர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே இரண்டு பெண்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பிறகு, போலிஸார் அங்கு வருவதற்குள் அந்த வியாபாரி அங்கு இருந்து தம்பிச் சென்றுவிட்டார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஒடிய வியாபாரியைத் தேடி வருகின்றனர்.
Also Read
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!