India
“மொபைல் சாட்டிங் பழக்கத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்” : கோவாவில் கண்டுபிடித்த போலிஸ்!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்குட்பட்ட பத்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மொபைல் போனில் நண்பர்களுடன் தொடர்ச்சியாக சாட்டிங் செய்து வந்துள்ளார். இச்சிறுவன் எந்த நேரமும் செல்போன் சாட்டிங்கிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சிறுவன் அக்டோபர் 31ம் தேதியிலிருந்து காணவில்லை. இது குறித்துப் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை செய்தனர். இதையடுத்து சிறுவன் பயன்படுத்தும் செல்போனின் ஐ.பி முகரியை போலிஸார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் கோவாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் கோவா சென்று சிறுவனை மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் காணாமல் போனது குறித்து சிறுவனிடம் விசாரித்தபோது, நண்பர்களுடனான செல்போன் சாட்டிங்கில், தங்களை நிரூபிப்பதற்காக வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என பேசியுள்ளனர்.
இதனால் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை வழங்க வேண்டும் என பெற்றோரிடம் போலிஸார் அறிவுறுத்தினர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!