India
“இருமல் டானிக் என நினைத்து தைலத்தை குடித்தவருக்கு ஏற்பட்ட துயரம்” : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். காவலாளியாக பணியாற்றி வந்த இவர் நேற்று இரவு தனது பேரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, தொண்டை கரகரப்பாக இருந்ததால் வீட்டிலிருந்த இருமல் மருந்துக்குப் பதில் நீலகிரி தைலத்தைக் குடித்துள்ளார். இதை உணர்ந்த ராஜசேகர் உடனே உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ராஜசேகர் உயிரிழந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ராஜசேகர் குடிபோதையில் இருந்ததால் இருமல் டானிக்கிற்குப் பதிலாக தைலத்தைக் குடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலிஸார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அண்ணா பற்ற வைத்த அந்த ’தீ’யை யாராலும் அணைக்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கவிஞர் யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது : தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!
-
“இதோ.. இன்று ஒரு ‘பராசக்தி’ பேரொளி எழுப்பி இருக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
“ஜன.17 அன்று ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு மதுரை செல்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!