India
“தூங்கிக்கொண்டிருந்த இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்” : காதலை ஏற்க மறுத்ததால் நடந்த கொடூரம்!
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங். இளம் பெண்ணான இவர் தனது வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த பிரேம் சிங் என்ற இளைஞர் திடீரென தான் எடுத்து வந்திருந்த கத்தியால் ருக்கிசிங்கின் கழுத்தை அறுக்கப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அவரை தடுத்துக் கத்தியுள்ளார்.
இவரின் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த பெற்றோர்கள் உடனே பிரேம் சிங்கை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் அந்த இளைஞரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரித்த போது பிரேம் சிங், ருக்கிசங்கை காதலித்து வந்துள்ளார். அவரின் காதலைத் தெரிவித்தபோது அதை ருக்கி சிங்க மருத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய பிரேம் சிங் முடிவு செய்தது தெரியவந்தது. மேலும் ருக்கி சிங்கின் உறவினர் பிரேம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
கழுத்தில் குத்தியதில் ஏற்பட்ட காயத்தினால் ருக்கி சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!