India
“மனைவி உயிரிழந்த சோகம்.. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை”: கர்நாடகாவில் சோகம்!
கர்நாடக மாநிலம், பெல்காவி மாவட்டம் ஹுக்கேரி தாலுக்காவிற்கு உட்பட்ட போரகல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் கடந்த ஜூலை மாதம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், கொரோனாவில் இருந்து ஜெயஸ்ரீ மீண்டுள்ளார். ஆனால் நில நாட்களிலேயே கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதையடுதது மனைவி ஜெயஸ்ரீ இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் கோபால் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது குழந்தைகளான சௌமியா, ஸ்வேதா, சாக்ஸி, சுர்ஜன் ஆகிய நான்கு பேருக்கும் தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.பின்னர் கோபாலும் தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகள் மற்றும் கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!