இந்தியா

“தன்னைப்போல் இல்லையென பிறந்த 2 மாத குழந்தையை கொன்ற தந்தை” : ஆந்திராவில் நடந்த கொடூரம்!

தன்னைப்போல் இல்லாததால் பிறந்த இரண்டு மாத குழந்தை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தன்னைப்போல் இல்லையென பிறந்த 2 மாத குழந்தையை கொன்ற தந்தை” : ஆந்திராவில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், கல்யாண துர்க்கம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜினா. இவரது மனை சிட்டம்மா. இந்த தம்பதிக்குப் பிறந்து இரண்டு மாதங்களான ஆன பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், பிறந்த குழந்தை தன்னைபோலவும், உறவினர்கள் போலவும் இல்லை. எனவே உன்னுடைய நடத்தையில் சந்தேகம் இருக்கிறது என கூறி மனைவியிடம் மலிகார்ஜினா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தம்பதிகள் இருவரும் நேற்று குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குழந்தை அழுததால் மல்லிகார்ஜினா குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர், நீண்ட நேரம் ஆகியும் கணவனும், குழந்தையும் வராததால் சந்தேகம் அடைந்த சிட்டம்மா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் அனந்தபூரில் தலைமறைவாக இருந்த மல்லிகார்ஜினவை கைது செய்தனர்.

அப்போது, குழந்தை குறித்து விசாரணை செய்தபோது தன்னுடைய சாயலில் குழந்தை இல்லாததால் குழந்தையின் வாயில் பிளாஸ்டரி ஒட்டி மூச்சுத்திணற செய்து கொலை செய்துவிட்டு, பிறகு பை ஒன்றில் குழந்தையை அடைத்து ஏரியில் வீசி விட்டேன் என கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஏரிக்குச் சென்ற போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மல்லிகார்ஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories