India
“இருளில் மூழ்கப்போகும் இந்தியா..? பதறியடித்து மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர்கள்” : காரணம் என்ன?
இந்தியாவில் 70% மின் உற்பத்தி நிலக்கரியை நம்பியே உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நிலக்கரிக்கு கடும் தட்டப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு ஒரு புறம் என்றால், விலைவாசியும் உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் இந்தியாவுக்கு மற்றொரு புறம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கையிருப்பில் உள்ள நிலக்கரிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
மேலும் நிலக்கரி தட்டுப்பாட்டை உடனே சரி செய்யவில்லை என்றால், விரைவில் இந்தியா இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போதே ராஜஸ்தானில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியிலும் ஒருநாள் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு சனிக்கிழமை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதில், நிலக்கரி தட்டுப்பாடு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எங்களால் முடிந்தவரை முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களை மூடுவதற்கான அபாயம் உள்ளதால் மாநிலத்திற்கான நிலக்கரி விநியோகத்தை உடனே அதிகரிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆந்திராவிலும் கடுமையான நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, “தற்போது அறுவடையின் கடைசிக் கட்டத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள். அதிகமாகத் தண்ணீர் தேவைப்படுகிறது. மின்சாரம் இல்லை என்றால் வயல்கள் காய்ந்துவிடும் அபாயம் உள்ளது” என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரமருக்கு எழுதிய கடித்தில் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாகப் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களும் மின்வெட்டு பிரச்சனையை தற்போதே சந்தித்து வருகிறது. இந்திய முழுவதுமே நிலக்கரிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒன்றிய மின்துறை அமைச்சகத்தின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு வாரத்திற்கு இரண்டு முறை நிலக்கரி இருப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறது. மேலும் சில நாட்களிலேயே அனைத்து மாநிலங்களிலும் நிலைமை சீரடையும் என ஒன்றிய நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!