India
போதைப்பொருள் வழக்கில் மகன் கைது... நடிகர் ஷாருக்கானுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் - சரியும் மார்க்கெட்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் பங்கேற்றதாக போதை தடுப்பு பிரிவு போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்யன் கானுடன் சேர்ந்து 18 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர் போலிஸார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
நடிகர் ஷாருக்கான் மகன் போதை வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பைஜூஸ் கல்வி நிறுவனம், நடிகர் ஷாருக்கான் நடித்த தமது விளம்பரங்களை நிறுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டிலிருந்து ஷாருக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதனால் ஆண்டுதோறும் இந்த நிறுவனம் 4 கோடி ரூபாய் ஷாருக்கானுக்குக் கொடுத்து வருகிறது. தற்போது அவரது விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள மற்ற விளம்பரங்களையும் அந்தந்த நிறுவனங்கள் நிறுத்தக்கூடுமோ என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!