India
விவசாயிகளை ஏற்றிக் கொன்ற காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு: திட்டமிட்ட படுகொலையா? - பகீர் தகவல்!
உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்ற குரல் நாடுமுழுவதும் ஒலித்து வருகிறது. இதையடுத்து உ.பி போலிஸார் இன்று விசாரணைக்கு ஆஜராக கோரி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய லவ் குஷ், ஆஷிஸ் பாண்டே என்ற இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விவசாயிகள் மீது கார் ஏறிச் செல்லும் வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ராமு காஷ்யப்பை சுட்டுக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் மீது கார் ஏறிய வாகனத்தை போலிஸார் சோதனை செய்தனர். இதில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்துள்ளது. இதை போலிஸார் பறிமுதல் செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தப்பித்துச் செல்வதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் மீது கார் ஏற்றிய வாகனத்தில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!