India
ஆசைக்கு இணங்காததால் ஆத்திரம்: இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய மர்ம நபர்; உ.பியாக மாறும் பாஜக ஆளும் கர்நாடகா!
கர்நாடகாவின் யாதகிரி மாவட்டம் சுராப்புரா அருகே சௌடேஸ்வரி மால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலம்மா. திருமணமாகி கணவருடன் வசித்து வந்த இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக பாலம்மா வுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இப்படி இருக்கையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பாலம்மா தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பாலம்மாவை பலாத்காரம் செய்ய முயன்றபோது அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பாலம்மாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய பாலம்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கல்புரகி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பாலம்மாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் இந்த செயலை செய்திருக்கலாம் என்று சுராப்புரா போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!