India
பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்... தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம் : மும்பையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடலா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அப்பகுதியில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த முகமது ஷேக் என்ற வாலிபர் அவரது அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைக் கண்ட அவர் ஏன் இப்படி பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முகமது ஷேக் தான் வைத்திருந்த கத்தியால் முகமது அன்சாரியைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த முகமது அன்சாரியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து முகமது ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
- 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!