India

“கணவன் இழந்த சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை”: விசாரணையில் கிடைத்த கடிதத்தால் பரபரப்பு!

பெங்களூரு அருகே நெலமங்கலா பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்னகுமார். இவர் கடந்த ஒரு வருடம் முன்பு கொரோனாதொற்று காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்று பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவன் இறந்து ஒரு வருடம் ஆகியும் அந்த தூக்கத்தில் இருந்த மனைவி வசந்தா (வயது 41 ) தன் குழந்தைகளான எசவந்த் (15) மகள் நிக்சிதா (6) ஆகிய மூவரும் நேற்று இரவு தாயும் மகளும் ஓர் அறையிலும் மகன் மற்றொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நாயக்கனஹள்ளி போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு, நெலமங்கலா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போலிஸார் விசாரணையில், ஒருவருடம் முன்பே கணவர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்டு இருந்த இந்த குடும்பத்தினர் தற்போது குடும்பத் தலைவன் இல்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தற்கொலைக்கு முன்பு இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளார். வசந்தா அதில், தாங்கள் வீட்டுக்காக வாங்கிய கடன் ஓரளவு அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மீதமுள்ள கடன் தொகையை இந்த வீட்டை விற்பனை செய்து கடனை அடைத்துவிட்டு மீதமுள்ள தொகையை ஆசிரமத்திற்கு வழங்கிடவும் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. நாயக்கனஹள்ளி போலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!