India

வாட்ச்மேன் வேலைபார்த்து பிரபல குற்றவாளியை கைது செய்த போலிஸ்காரர் : நடந்தது என்ன?

குஜராத்தைச் சேர்ந்தவர் மணிஷ் சிங். இவர் மீது கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் அதிகம் உள்ளன. இதனால் இதனால் இவரை போலிஸார் வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் இவர் மும்பையில் உள்ள நாலாசோபாராவில் பதுங்கியிருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பிறகு மஹாவீர் சிங் என்ற போலிஸார் அப்பகுதியில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மணிஷ் சிங் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடித்தார். பிறகு அவரை தொடர்ந்து மஹாவீர் சிங் மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளார். ஆனால் குற்றவாளி மணிஷ் வீட்டை விட்டே வெளியே வரவேயில்லை.

இதையடுத்து மஹாவீர் சிங், குற்றவாளி தங்கியிருக்கும் குடியிருப்பில் வாட்ச்மேன் வேலைக்குச் சேர்ந்து தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இப்படி 20 நாட்களாக வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தபோது திடீரென குற்றவாளி மணிஷ் சிங் வெளியே வந்துள்ளார். அப்போது உடன அவரை மடக்கிப் பிடித்துள்ளார் மஹாவீர் சிங்.

இதற்கு அங்கிருந்த குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். உடனே விரைந்து வந்த போலிஸார் மணிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணிஷ் சிங், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை மனிஷா கொய்ராலாவின் செயலரைக் கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “படத்துல மட்டும் இல்ல.. நிஜத்திலேயும் அப்படித்தான்” : போதைப்பொருள் கடத்திய 'சிங்கம் 2' நடிகர் கைது!