India
என் மேல எதுக்கு குண்டாஸ் போட்டீங்க? - கோர்ட்டில் வாதாடி கர்நாடக அரசுக்கு அபராதம் விதிக்கச் செய்த நபர் !
பெங்களூரு நகரில் வசித்து வருபவர் உல்லால் கார்த்திக். இவர், சிறு, சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கார்த்திக்கை பெங்களூரு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர்.
தன்னை சட்டவிரோதமாக குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாகவும், இதற்கு உத்தரவு பிறப்பித்த போலிஸ் கமிஷனர் கமல்பந்த், இதற்கான அனுமதியை வழங்கி கர்நாடக அரசு மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கார்த்திக் கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் சந்திரசர்மா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது கார்த்திக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.
வாலிபரின் சொந்த சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையாக இருக்கிறது, என்றார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மீது தாக்கல் செய்யப்பட்டகுண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அவரது சொந்த சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருப்பதால், அவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ரூ.25 ஆயிரத்தை கர்நாடக அரசு அபராதமாக செலுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி சதீஸ் சந்திரசர்மா உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!