India
"இனி மோடி மந்திரம் பலிக்காது": எடியூரப்பாவின் பேச்சால் பா.ஜ.கவில் சலசலப்பு!
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக எடியூரப்பா இருந்த போது பதவி விலகச் சொல்லி பா.ஜ.க தலைமை அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார். பின்னர் பசவராஜ் பொம்மையை புதிய முதலமைச்சராக பா.ஜ.க தலைமை தேர்வு செய்தது.
இந்நிலையில், இனி வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெற மோடியின் பெயர் மட்டும் போதாது என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேசியிருப்பது பா.ஜ.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தாலுக்கா தேர்தல், மேலவை உறுப்பினர்கள் தேர்தல் , இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று தேவனாகிரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “கர்நாடக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளைச் சொல்லி வெற்றி பெற்றோம்.
மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை என்பதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார். எடியூரப்பாவின் இந்த பேச்சால் பா.ஜ.க டெல்லி தலைமையிடம் அதிருப்தியடைந்துள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!