India
வேலியே பயிரை மேய்வதா?: இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள்!
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சிலர் இதனைக் கண்டு அவரை உடனே மீட்டனர். பின்னர், அந்த பெண்ணிடம் தற்கொலை காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பெண்ணின் மாமா உத்தர பிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிளாக உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்த பெண்ணின் குடும்பத்தாரை அழைத்துள்ளார். இவர்களும் கும்பமேளாவைப் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவரது மாமா அந்த பெண்ணை விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
இதை குடித்து மயக்கமடைந்த அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோ காட்டி மிரட்டிக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கங்கை நதியில் குதித்துள்ளார். அப்போதுதான் போலிஸார் அவரை மீட்டுள்ளனர். பின்னர் இளம் பெண் கூறியதைத் தொடர்ந்து அவரது மாமாவை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?