India
“எங்க குடும்ப மானம் போச்சு..” : தந்தையைக் கொன்று நாடகமாடிய மகன் : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
உத்தர பிரதேச மாநிலம், கதொலி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆண் சடலம் ஒன்றை போலிஸார் கண்டெடுத்தனர். இதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்ததில் அது ரெஷ்பால் என்பது தெரியவந்தது.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்தபோது, தனது தந்தையைக் கொலை செய்தவர்கள் இவர்கள்தான் என ரெஷ்பாலின் மகன் சுமித் குமார் மூன்று பேரின் பெயர்களைத் தெரிவித்துள்ளார். இவர்களிடத்திலும் போலிஸார் விசாரணை செய்தனர்.
இதையடுத்து சுமித் குமாரின் நடவடிக்கையில் போலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்தபோது தான் தான் கொலை செய்தாக அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், தனது தந்தைக்கு ஒருவருடன் ஓரினச்சேர்க்கை தொடர்பு இருந்தது. இதனால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டது. அவருக்கு தனது சொத்துகளை எல்லாம் மாற்றவும் தந்தை முயற்சி செய்தார். இதனால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து, வேறு சிலர் மீது பழி போட்டுத் தப்பித்து விடலாம் என நினைத்தேன் என விசாரணையில் சுமித் குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையை கொலை செய்துவிட்டு மகன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்