India
பெண் போலிஸ் முன்பு நிர்வாணமாக நின்ற கைதி: குஜராத் காவல்நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்!
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்திற்குட்பட்ட தலோதரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நந்த்வானி. இவர் கடந்த வெள்ளியன்று பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டிருப்பதாக போலிஸாருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலிஸாரையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனால் போலிஸார் அவரை கைது செய்து சலபத்புரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், காவல்நிலையத்தில் இருந்த சிறையில் அவரை அடைத்தனர். அப்போது தொடர்ந்து சுரேஷ் கத்திக்கொண்டே இருந்துள்ளார். இதனால் கடுப்பான பெண் போலிஸ் ஒருவர், அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார். அப்போது, திடீரென சுரேஷ் தனது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக நின்றுள்ளார். மேலும் காவல்நிலையத்திலிருந்த பெண் போலிஸாரை பார்த்து ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சக போலிஸார் சிறைக்குள் நுழைந்து உடைமாற்றச் செய்தனர். பின்னர் பெண் போலிஸாரிடம் ஆபாசமாக நடந்துகொண்டதால் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.
சுரேஷ் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் லக்கோனவில், பெண் போலிஸார் ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல் அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!