India
“கை, கால்களை வெட்டி, முகத்தை பிளேடால் கிழித்து காதலி கொடூரமாக கொலை” : காதலன் சொன்ன அதிர்ச்சி காரணம்!
மகாராஷ்டிரா மாநிலம், நந்துபார் பகுதியில் உள்ள ரயில்நிலையம் அருகே கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு போலிஸார் சென்றபோது, இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு, முகத்திலிருந்த தோலை பிளேடால் கிழித்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட நிலையிலிருந்த பெண்ணின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, இந்த கொடூர கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இறந்த பெண்ணுடன் வாலிபர் ஒருவர் செல்லும் காட்சி இருந்தது.
பிறது அந்த வாலிபர் யார் என்பது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், அவர் சூரத் பகுதியைச் சேர்ந்த வினய் ராய் என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண் பீகாரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரத்திற்கு சென்று போலிஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
வினய் ராய் தனக்குத் திருமணமானதை மறைத்து இரண்டு வருடங்களாக அந்தப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் வினய் ராயிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் வினய் ராய் தொடர்ந்து தாமதித்து வந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண், என்னை ஏமாற்றலாம் என நினைத்தால் காவல் நிலையத்தில் உன் மீது பாலியல் புகார் கொடுத்துவிடுவேன் என வினய் ராயிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மகாராஷ்டிராவுக்கு காதலியை அழைத்து வந்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, பிறகு மீண்டும் எதுவும் நடக்காதது போல் தனது வேலையைப் பார்த்துவந்துள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!