India
கணவனை இழந்த பெண்ணை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தும் உறவினர்கள் : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரை சேர்ந்தவர் அனிதா. இவரது கணவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தார். இதனால், செலவுகளுக்குப் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அனிதாவின் உறவினர்களான காஜா சிங் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் அவரிடம் “நீ மிகவும் கஷ்டப்படுர. நாங்கள் சொல்வதைக் கேட்டால் இனி கஷ்டமே இருக்காது" என கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட அவர் ஏதாவது வேலை வாங்கித்தருவார்கள் என முதலில் நினைத்துள்ளார். பிறகு அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாகப் பேச்சுக் கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை ஏற்படுத்த முன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் அந்த தம்பதியினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். எனக்கு இதில் துளிகூட விருப்பம் இல்லை என தெளிவாக அவர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த தம்பதியினர் அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனிடையே தற்போது அந்தப் பெண் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார். பெண் கொடுத்தப் புகாரின் பெயரில் விசாரணை நடத்திய போலிஸார் தம்பதியினர் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்த இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!