India
'செல்போன் கடைக்காரரை தீ வைத்து கொளுத்திய கணவன், மனைவி': தெலங்கானாவில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் அசோக் என்பவரிடம் ஏலச்சீட்டிற்கு பணம் கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ஏலச்சீட்டு தொடர்பாக இருவருக்கும் சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ராஜூவின் செல்போன் கடைக்கு அசோக் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர்.
அப்போது, மீண்டும் ஏலச்சீட்டு தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் திடீரென ராஜூ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையிலேயே ராஜூ சாலையில் ஓடியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.அங்கு ராஜூ தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்ற வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் அசோக் மற்றும் அவரது மனைவியைத் தேடி வருகின்றனர். செல்போன் கடைக்காரர் மீது தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!