India
"இன்னிக்கு ராத்திரி உயிரோடு இருப்பேனானு தெரியல..." : இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
கேரளாவைச் சேர்ந்தவர் சுனிஷா. இவருக்கும் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த விஜீஷ் என்பவருக்கும் ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுனிஷா அண்மையில் கணவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் சேர்ந்து சுனிஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சுனிஷா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது சகோதரரிடம் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் "உங்களால் முடிந்தால், தயவு செய்து இப்போதே வாருங்கள். நான் வரத் தயாராக இருக்கிறேன். எனது கணவரும் அவரது தாயாரும் என்னை அடித்துத் துன்புறுத்துகின்றனர். இன்றிரவு நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை" என அதில் பேசியுள்ளார். தற்போது இந்த ஆடியோ கேரள ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சமீபமாக வரதட்சணை கொடுமையால் விஷ்மயா, அர்ச்சனா, சுசித்ரா என இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது சுனிஷாவின் மரணம் கேரளத்தில் மீண்டும் வரதட்சணை கொடுமை குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!