இந்தியா

“சொகுசு கார் கேட்டு வரதட்சணை கொடுமை” : மறுத்த மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் - பகீர் சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் மனைவியை கணவன் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சொகுசு கார் கேட்டு வரதட்சணை கொடுமை” : மறுத்த மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் - பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on


உத்தர பிரதேச மாநிலம், அம்ரோகா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை வரதட்சணை கேட்டு கணவன் மற்றும் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ராஜாப்புர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக எனது பெற்றோர் அதிகமான வரதட்சணை கொடுத்திருந்தனர்.

இருந்தபோதும், கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரிடம் சென்று சொகுசு கார், ஐந்து லட்சம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு கணவர் வற்புறுத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால், கணவர் மற்றும் அவரின் சகோதரர், நண்பர்கள் ஆகியோர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் பணம் தரவில்லை என்றால் இப்படித்தான் தொடர்ந்து நடக்கும் எனவும் மிரட்டல் விடுத்தனர்" என தெரிவித்துள்ளார்.

இவரது புகாரின் அடிப்படையில்டு போலிஸார் கணவன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள கணவனை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories