India
பலே திருடன்... கொள்ளையை காட்டிக் கொடுத்த X-ray: அதிர்ச்சியடைந்த பெங்களூரு போலிஸ்!
பெங்களூரு சிட்டி மார்க்கெட்டின் எம்.டி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவர் சம்பவத்தன்று இரவு கடை ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த மூன்று நபர்கள் திடீரென ஹேமா கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு ஓடினர். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
இதில் மூன்று பேரில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கார். அவரிடம் செயின் இருக்கிறதா என மக்கள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ஆனால் செயின் இல்லை. பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த போலிஸார், திருடனை பொதுமக்களிடமிருந்து மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் திருடனுக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது திருடனின் வயிற்றில் தங்கச் செயின் இருந்ததைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள், திருடனின் வயிற்றிலிருந்த செயினை எடுப்பதற்காக அவருக்கு எனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். பின்னர் அவரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்தபோது, திருடன் பெயர் விஜய் என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மற்ற இருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!