India
“மன்னிப்புக் கடிதத்திற்கு பெயர்போன புரட்சிகர தலைவர் யார்?” : பா.ஜ.கவுக்கு விபூதியடித்த மேற்கு வங்கம்!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து துறைகளிலும் தங்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புகுத்த முயன்று வருகிறது. யு.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வாணைய தேர்வுகளில் தங்கள் சித்தாந்தத்துக்கு ஆதரவான வினாக்களை இடம்பெறச் செய்து வருகிறது.
சமீபத்தில் கூட, யு.பி.எஸ்.சி தேர்வாணையம் நடத்திய மத்திய ஆயுதப்படை துணை ராணுவப் படை (CAPF) பணிகளுக்கான தேர்வில், பா.ஜ.கவின் குரலை எதிரொலிக்கும் வகையிலான கேள்விகள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பா.ஜ.க அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கு வங்க குடிமைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கரை அம்பலப்படுத்தும் வகையில் கேள்வி இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசுக்கும், பா.ஜ.கவுக்குமிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மேற்கு வங்க அரசுப் பணிகளுக்கான தேர்வில் “சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு சாவர்க்கர் உள்ளிட்ட நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ, இதில் தனிப்பட்ட காழ்ப்பு ஏதுமில்லை என்றும் வரலாற்றில் நடந்த நிகழ்வே கேள்வியாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்துள்ளனர்.
பா.ஜ.கவினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களுக்குப் பெயர்போனவர். 1911ஆம் ஆண்டு முதல் பல முறை ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார் சாவர்க்கர்.
“ஆங்கில அரசு விரும்பும் எதையும் செய்ய நான் தயார். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கு செல்வேன்” என சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!