India
'ஒட்டுக்கேட்பு விவகாரம்... 6 எம்.பிக்கள் இடைநீக்கம்' : விவாதிக்க மனமின்றி பழிவாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், ஒன்றிய அரசு பெகாசஸ் குறித்து விவாதிக்க முன்வராமல் நாள்தோறும் கூட்டத் தொடரை ஒத்திவைத்து வருகிறது. அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் நேரமும், மக்கள் வரிப் பணமும் வீணாகிறது என ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெகாசஸ் விவாதம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசின் பதிலோ மவுனமாகவே இருக்கிறது. இதனால் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் மவுனத்தைக் கலைத்து உண்மையை வெளிக்கொண்டு வர போட்டி நாடாளுமன்றம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 12வது நாளாக இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மீண்டும் பெகாசஸ் பிரச்சனையை எழுப்பினர். அப்போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டால் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பெகாசஸ் பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என குரலெழுப்பினர். பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து அவையிலிருந்து அவர்களை வெங்கையா நாயுடு வெளியேற்றினார்.
ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பினால் அமளி செய்கிறோம் என அவையிலிருந்து இடைநீக்கம் செய்வதா என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!
-
"இன்னும் எத்தனை உயிர்கள்?" - த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி ஆவேச கேள்வி!
-
2 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.. தொடங்கிய கவுண்டவுன்!
-
மாணவர்களின் அயல்நாட்டு கல்விக் கனவு சிதைக்காதே : த.வெ.க அரசுக்கு SFI கண்டனம்!