India
கைம்பெண்ணின் ஆடையைக் கிழித்து மொட்டை அடித்து தாக்கிய கும்பல்... பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!
குஜராத் மாநிலம் சஞ்சேரி கிராமத்தில் கைம்பெண் ஒருவர் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஹிம்மதுநகரில் உள்ள வங்கிக்குச் சென்றுவிட்டு, இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தை நோக்கி வந்துள்ளார்.
இவர் சாலையில் நடந்து சென்றதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். இதனால் அப்பெண்ணும், அவரது குழந்தைகளும் வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.
இவர்கள் கிராமம் அருகே வந்தபோது, நான்கு பேர் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் லிஃப்ட் கொடுத்தவருக்கும், அப்ணெணுக்கும் தவறான உறவு இருப்பதாகக் கூறி இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் அப்பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, அவரது தலையை மொட்டையடித்து கிராம மக்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியுள்ளனர். இனி உங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது என அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைம்பெண்ணைத் தாக்கி மொட்டை அடித்த ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!