India
46 மாவட்டங்களில் பாதிப்பு தீவிரம் : இந்தியாவில் துவங்கிவிட்டதா கொரோனா 3.0? - எச்சரிக்கும் ஒன்றிய அரசு !
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து பல மாநிலங்களில் ஊரடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 41,831 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேபோல், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்திருந்த கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தீவிரப்பட்டுத்தியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் 46 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக 10% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே இந்தப்பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகப் படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மூன்றாவது அலை பரவி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!