India
அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க எம்.பி.. இந்திய அளவில் மோடிக்கு எதிராக வியூகம் அமைக்கும் மம்தா?
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மக்கள் விரோத சட்டங்களை ஏற்படுத்தி மக்களைத் தொடர்ந்து வதைத்து வருகிறது. மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் தொடங்கி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து மக்களை துயருக்குள்ளாக்கி வருகிறது.
இதனால், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க இப்போதே வியூகம் வகுக்க வேண்டும் என்று கூறி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேசினார்.
மம்தா பானர்ஜியின் எதிர்க்கட்சிகள் சந்திப்பு அரசியல் பட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வலுவான மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தவர்கள், மீண்டும் திரிணாமுல் கட்சியில் இணைந்து வருகிறார்கள். பா.ஜ.க போட்ட கணக்கு எல்லாம் அங்கு தவிடு பொடியாகி விட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க பா.ஜ.க எம்.பி பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்தும், எம்.பி பதவியில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்துள்ளார். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், பாபுல் சுப்ரியோ ஒருவர்.
பாடகர் மற்றும் நடிகரான இவரை பயன்படுத்து மேற்குவங்க தேர்தலில் தனது கணக்கை துவங்கியது பா.ஜ.க. மேலும் தனது கட்சியின் வளர்ச்சிக்காக பாபுல் சுபரியோவுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுத்தது.
இதையடுத்து, அன்மையில் ஒன்றிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதில் பாபுல சுபரியோவை ஒன்றிய அமைச்சரவையில் இருந்து பா.ஜ.க மேலிடம் நீக்கியது. ஏழு ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையில் இருந்து மேற்கு வங்கத்தின் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்துவந்துள்ளார்.
திடீரென பாபுல் சுப்ரியோவை ஒன்றிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், நேற்று திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
பாபுல் சுபரியோ எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என தெரிவித்திருந்தாலும், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இவரை கொண்டு பா.ஜ.கவுக்கு எதிராக மம்தா பானர்ஜி புதுவியூகம் வகுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!