India

சுத்திகரிப்பு ஆலையின் குழாயில் துளையிட்டு பெட்ரோல், டீசல் திருட்டு - போலிஸிடம் சிக்கிய நில உரிமையாளர்!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையிலிருந்து ஹாசன் வழியாக பெங்களூருக்கு குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த குழாய் வழியே பெட்ரோலியம் மங்களூருவிலிருந்து அனுப்பும் அளவில் இருந்து, சேரும் இடத்தில் குறைவாக இருந்தது தொடர்ந்து வந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பைப்லையன் செல்லும் இடங்களில் முழுமையாக எங்காவது கசிவு எற்ப்பட்டிருக்கிறதா என சோதனையிட்டனர்.

அப்போது பண்டுவால் தலுகா அரலா கிராமத்தில் ஐவான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பெட்ரோலியம் லீக் ஆகி இருந்தது தெரியவந்தது. அந்த இடத்தை பறித்து சோதனையிட்டபோது, அங்கு பெட்ரோல் பைப் லைனில் 1.5 இஞ்ச் அளவுக்கு பைப் லையணில் துளையிட்டு நீளமாக பைப் பொருத்தி 3 வால்வுகள் அமைத்து பெட்ரோல் டீசலை திருடிய விவரம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பண்டுவால் புறநகர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர் ஐவான் மற்றும் அவருக்கு உடந்தையாக ராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

Also Read: தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐயாக சிவன்யா தேர்வு: பணியாணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!