India
“வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்”: ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி ரமணா கோரிக்கை!
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் எழுதிய 'சட்டம் மற்றும் நீதியில் முரண்பாடுகள்' நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பங்கேற்று நூலை வெளியிட்டார்.
பின்னர் தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், "கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகள், மலைப்பகுதிகளில் மோசமான இணைய வசதி இருப்பதால், நீதி வழங்குவதின் வேகத்தைப் பாதிக்கிறது. எனவே இந்த பிரச்சனைக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்குக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்.
அதேபோல், கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் இணையப் பிரச்சனையால் அனைத்து தலைமுறை வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்ட தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட வேண்டும்"என கூறினார்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !