India
குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த இளம் பெண்.. வாட்ஸ் அப்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்மயா. இவர் ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார். இவருக்கும் கிரண்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது. பின்னர் கணவன் வீட்டில் விஷ்மயா வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து, திருமணமான கொஞ்ச நாளில் விஷ்மயா வீட்டிற்கு இருவரம் வந்துள்ளனர். அப்போது பெற்றோர்கள் முன்னிலையிலேயே விஷ்மயாவை அவரது கணவர் குடிபோதையில் தாக்கியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற விஷ்மயாவின் சகோதரயையும் கிரண்குமார் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து போலிஸாரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்து போலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் விஷ்மயா அம்மா விட்டியிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார் விஷ்மயா. அப்போது கணவர் கிரண்குமார் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், திங்களன்று விஷ்மயா கணவர் வீட்டின் குளியல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அவரின் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஷ்மயா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜில், கணவர் தினமும் வேலையை விட்டு வீடு திரும்பியதும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தந்தையைப் பற்றி இழிவான சொற்களில் பேசுவதாகவும், வரதட்சணையாகக் கொடுத்த வாகனம் நன்றாக இல்லை என கூறி தினமும் அடிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு நாளில் விஷ்மயா இறந்துள்ளதால், அவரை கொடுமைப் படுத்தி அடித்து கொலை செய்துள்ளதாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து சூரநாடு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!