India

முடியப் போகும் யோகி அரசு; உ.பிக்கு திடீரென ₹11,000 கோடி ஒதுக்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து அங்கு வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு, 10 ஆயிரத்து 870 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 60 ஆயிரம் கிராமங்களில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ஜல்சக்தி துறை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 2 ஆயிரத்து 571 கோடி நிதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி 4 மடங்கு அதிகமாகும்.

உத்தரப் பிரதேச தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காகவே, அம்மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Also Read: “கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாகவும், அரசியல் பாகுபாட்டோடும் நடந்து கொள்கிறார் மோடி” : காங்கிரஸ் சாடல்!