India
'கொரோனாவுக்கு தடுப்பூசியே தீர்வு... மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள்' : ’பல்டி’யடித்த பாபா ராம்தேவ்!
பா.ஜ.க ஆதரவாளரான பாபா ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பா.ஜ.க அரசு அதிகளவில் விளம்பரப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. கொரோனா முதல் அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற மருந்தை அறிமுகம் செய்தார் பாபா ராம்தேவ்.
இவரின் இந்த மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்து ஆய்வுக்கும் உட்படுத்தியது. இதற்கு மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளையும், கேள்விகளையும் எழுப்பினர். தற்போது கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் கொத்துக் கொத்தாகச் சாவும் போது கூட யோகாவும், ஆயுர்வேதமும் கொரோனாவை வென்றுவிடும் என்று பேசி வந்தார்.
மேலும், மருத்துவர்கள் தங்களின் உயிரைக்கொடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் முதன்மையாக இருந்து போராடி வரும் நிலையில், அலோபதி மருத்துவம் ஏமாற்று வேலை என பாபா ராம்தேவ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்கினார் பாபா ராம்தேவ்.
இந்நிலையில், பாபா ராம்தேவ் தான் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளப்போவதாகவும், மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் என்றும் பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாபா ராம்தேவ், "நான் விரைவாகவே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வேன். யோகா, ஆயுர்வேதம் ஆகிய பலத்துடன் பலத்துடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டால் இரட்டை அரண் பாதுகாப்பைப் பெறுவீர்கள். இவ்வாறு செய்தால் கொரோனாவுக்கு எந்த ஒரு உயிரும் பலியாகாது. அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர் போன்றவர்கள், அதில் எனக்கு சந்தேகம் கிடையாது. உண்மையில் மருத்துவர்கள் பூமிக்குக் கிடைத்த ஆசீர்வாதம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!