India

60 நாட்களுக்குப் பிறகு கணிசமாகக் குறைந்த கொரோனா தொற்று: இன்று புதிதாக 1.14 லட்சம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் 60 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,14,460 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 1,89,232 பேர் கொரானா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. கடந்த 60 நாட்களுக்கு முன்பு 4 ஆயிரத்திற்கு மேல் பதிவான எண்ணிக்கை, சற்று குறைந்து ௨,677 ஆக உயிரிழப்போர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன் மூலம் 3,46,769 பேர் நாடு முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 10 நாட்களாக 2 லட்சத்திற்குக் கீழ் தொற்று பதிவாகி வருகிறது. இருந்தபோதும், உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தால் மட்டுமே, இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது என கூற முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Also Read: கொரோனா பாதித்த மனைவி... கழிவறையில் தனிமைப்படுத்தி கொடுமை செய்த கணவர் : தெலங்கானாவில் அவலம்!