India
யோகியின் மாவட்டத்தில் 46,000 பேர் பாதிப்பு.. பெருந்துயரை வேடிக்கை பார்க்கிறது பாஜக அரசு: அகிலேஷ் தாக்கு!
கொரோனா பெருந்தொற்றால் உத்தர பிரதேச மாநிலம் மிக மோசகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
கொரோனா தொற்றால் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சடலங்களை எரிப்பதற்கான இடம் கிடைக்காமல், கங்கை நதியில் வீசுவதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலையும், உயிரிழப்பை பற்றிக் கண்டு கொள்ளாமலும், சேதத்தை அறியாமலும் பா.ஜ.க அரசு மவுனமாக வேடிக்கை பார்ப்பதாக சமாஜ்வாதிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள கிராமங்களில் கொரோனா உயிரிழப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது.
ஆனால், தொற்றைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்களைக் காணவில்லை. மாநிலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திவிட்டோம் என்று முதல்வர் ஆதித்யநாத் பொய் கூறி வருகிறார்.
ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் 46 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சல், இருமலுடன் அலைகிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமோ 764 பேர் தான் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுகிறது.
கிராமங்களில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதைச் சமாளிக்க போதுமான மருந்துகள், பரிசோதனை வசதிகள், தடுப்பூசிகளை மக்களுக்காக ஏற்பாடு செய்யாமல், அங்கு நடக்கும் பெருந்துயரை மவுனமாக பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!