India
மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி.. ஆனால், கொரோனா காலத்திலும் 41,926 கோடி வருவாய் ஈட்டிய அம்பானி!
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைத்ததில் இருந்து முதலாளிக்கு ஆதரவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு வகையில் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா காலத்தில் வறுமையில் தவித்த மக்களுக்கு உதவி செய்ய முன்வராத இந்த மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகையை அறிவித்தது.
இந்நிலையில் மோடி ஆட்சியில், இந்தியாவைப் பார்க்கும்போது தனியார் நிறுவனத்தின் தொழில்முனைவோர்களுக்கு சுனாமி போல ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என முகேஷ் அம்பானி முன்பே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.13,277 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்திலும், ஆசியாவின் நம்பர்-1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாக இந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3ஆம் காலாண்டில் ரூ.13,101 கோடி லாபம் ஈட்டியது. அதேபோல் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த கடைசி காலாண்டிலும் முன்பைவிட சுமார் ரூ.13,277 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட 108 சதவீதம் அதிகமாகும்.
அதுமட்டுமல்லாது, முகேஷ் அம்பானிக்கு எண்ணெய் - கெமிக்கல்ஸ் வணிகத்தின் வருவாய் 4.4% அதிகரித்து, ரூ.1.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், சில்லறை வணிக வருவாய் ரூ.41,926 கோடியாக அதிகரித்துள்ளது. நாடே பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் போது மோடியின் நண்பரான முகேஷ் அம்பானிக்கு சொத்து மதிப்பு மட்டும் எப்படி உயர்ந்தது என கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!