Corona Virus

“நிலைமை கைமீறி சென்றுவிட்டது.. தடுப்பு நடவடிகைகளை காற்றில் பறக்கவிட்ட மோடி அரசு” - ராகுல் காந்தி தாக்கு!

தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் விடுத்த முன்னெச்சரிக்கைகளை பிரதமர் மோடி காற்றில் பறக்கவிட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

“நிலைமை கைமீறி சென்றுவிட்டது.. தடுப்பு நடவடிகைகளை காற்றில் பறக்கவிட்ட மோடி அரசு” - ராகுல் காந்தி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைக் கட்டுபடுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், அவை அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.

குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாக, இந்தியாவில் நோய்தொற்றை சமாளிக்க முடியாமல் மோடி அரசு திணறி வருகின்றது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் விடுத்த முன்னெச்சரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி காற்றில் பறக்கவிட்டு விட்டதே இந்த நிலைக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

“நிலைமை கைமீறி சென்றுவிட்டது.. தடுப்பு நடவடிகைகளை காற்றில் பறக்கவிட்ட மோடி அரசு” - ராகுல் காந்தி தாக்கு!

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “கொரோனா இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கும் என மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் கடந்த ஆண்டே மோடி அரசை எச்சரித்தனர்.

ஆனால் அவர்களின் எச்சரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அலட்சியப்படுத்தி காற்றில் பறக்கவிட்டார். இதற்கான விலையைத்தான் இந்தியா இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓராண்டு காலம் அவகாசம் இருந்தது.

அப்போது அவர் நினைத்திருந்தால், நாடு முழுவதும் வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுகாதார மையங்களையும், ஆக்சிஜன் உற்பத்தி மையங்களையும் அமைத்திருக்க முடியும். ஆனால், பிரதமர் மோடி இதனைச் செய்யவில்லை. மாறாக, தேர்தல்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். மக்கள் நலனில் சிறிதும் அவர் அக்கறை செலுத்தவில்லை. இன்று நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories