India
மோடி பிரசாரம் செய்தும் தோற்கடிக்க முடியாத RTI செயற்பாட்டாளர்... சிறையிலிருந்தபடியே வென்ற அகில் கோகாய்!
சமூக செயற்பாட்டாளரான அகில் கோகாய் பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 வழக்குகளைப் பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் துவங்கிய ரைஜோர் தள கட்சியின் சார்பாக சிவ்சாகர் தொகுதியில் போட்டியிட்டார் அகில் கோகாய்.
அகில் கோகாய்க்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்படாத நிலையில் சிறையில் இருந்ததால், அவரது 85 வயதான தாய் பிரியாடா கோகாய் முன்நின்று தேர்தல் பணியாற்றினார்.
சிறையிலிருந்தபடி மக்களுக்கு கடிதம் எழுதிய அகில் கோகாய், “அசாம் காப்பாற்றப்பட வேண்டுமானால் பா.ஜ.க-வுக்கோ குடியுரிமைச் சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கோ வாக்களிக்க வேண்டாம்.” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும், தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் வழங்குவோம் என்றும், பா.ஜ.க-வில் இணைந்தால் தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க அமைச்சராகலாம் என்று ஆசைகாட்டப்பட்டதாகவும், மறுத்ததாலேயே ஜாமீன் மறுக்கப்பட்டதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 57,173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அகில் கோகாய். எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சுபமித்ரா கோகாய் 45,394 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பா.ஜ.க வேட்பாளருக்கு பிரதமர் மோடியே தேர்தல் பரப்புரை செய்த நிலையில், அகில் கோகாய் சிறையிலிருந்ததால் ஒருநாள் கூட நேரடியாக பரப்புரை செய்யாமலேயே வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில், பா.ஜ.க 78 இடங்களையும், காங்கிரஸ் 46 தொகுதிகளையும் பெற்றுள்ளன. இதன்மூலம் மீண்டும் அசாமில் ஆட்சி அமைக்கவிருக்கிறது பா.ஜ.க.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!