India
தீதியிடம் பணிந்த மோடி, அமித்ஷா... 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே கடும்போட்டி நிலவிவருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இத்தகவல் அடிப்படையில் பார்த்தால் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரப்போகிறார்.
தற்போது வெளியான தேர்தல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
மேற்கு வங்கத்தை எப்படியேனும் கைப்பற்றிட பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பல வியூகங்களை மேற்கொண்டனர். மேலும் தீவிரமான பரப்புரையும் செய்தனார். ஆனால் பா.ஜ.கவின் வியூகத்தை எல்லாம் மம்தா பானர்ஜி தவிடுபொடியாக்கியுள்ளார் என்பதையே தற்போதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !