India

ஆக்ஸிஜன் பற்றாக்குறை : மாநிலங்கள் பக்கம் உயர் நீதிமன்றங்கள் - மத்திய அரசை காப்பாற்றும் உச்ச நீதிமன்றம்!

நாடு முழுவதும் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர், தடுப்பூசி பற்றாக்குறை, ஊரடங்கு ஆகிய விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த டெல்லி, மும்பை, குஜராத், அகமதாபாத் உள்ளிட்ட நீதிமன்றங்கள் அரசுக்கு எதிரான கடுமையான விமரிசனங்களை முன்வைத்தன.

இந்த சூழ்நிலையில் அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது ஆஜரான மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல், ஆறுக்கும் மேற்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனைத் தொடந்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

Also Read: அதிகரிக்கும் Pharma நிறுவனங்களின் பங்குகள் : இலவச தடுப்பூசிக்கு இனி சாத்தியமில்லை!

இதனிடையே, ஆஜரான வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர், ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் அனுமதியளித்தால் 5,6 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க முடியும்.

நாள்தோறும் மக்கள் செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள் என்றார். அப்போது ஆஜரான மத்திய அரசின் சோலிசிட்டர், ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்காலம் என்றார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர் அடுத்த வாரத்துக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி மற்ற வழக்குகளுடன் சேர்த்து நாளை விசாரிப்பதாக கூறினார்.

Also Read: “கெஞ்சியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வழங்க வேண்டும்” : மோடி அரசை வெளுத்து வாங்கிய டெல்லி ஐகோர்ட்!