India
ஹரித்வாரில் 2220 பேருக்கு தொற்று உறுதி: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய கும்பமேளா - நிர்வாணி அகாரா தலைவர் பலி!
நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளன.
ஒருபக்கம் கொரோனா தடுப்புப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் வேளையில், மற்றொரு பக்கம் தீவிர கட்டுப்பாடு விதிக்காததன் விளைவாக கொரோனா 2வது அலை ருத்ரதாண்டவமாடுகிறது.
குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கடந்த 5 நாட்களில் மட்டும் 3,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட நிர்வாணி அகாரா தலைவர் கபில்தேவ் தாஸ் பலியாகியுள்ளார். இது சாமியார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நிர்வாண சாமியார்கள் கும்பமேளாவை விட்டு வெளியேறி தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பி வருகின்றனர்.
இந்த சாது சாமியார்களுக்கு மொத்தம் 13 அமைப்புகள் உள்ளன. இவற்றில் பெரிய எண்ணிக்கையிலான ஜூமா அகாரா என்ற அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் கும்பமேளாவை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு அமைப்பான நிரஞ்சனி அகாடாவும் வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் ஹரித்வார் நகரில் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஹரித்வாரில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்திட வேண்டும் என்றும் அதிக கூட்டம் கூடும் மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!