India
“தேர்தலில் தோல்வி எனத் தெரிந்து மே.வங்கத்தில் கொரோனாவை பரப்பிய பா.ஜ.க.,வினர்” : மம்தா பானர்ஜி தாக்கு!
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக அம்மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது வரை 4 கட்டத்தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் கைபற்ற வேண்டும் என பா.ஜ.கவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு அந்நியர்களே (பா.ஜ.கவே) காரணம் எனக் குற்றம் சாட்டினார். மேலும், பா.ஜ.கவை விமர்சித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவைக் கொண்டு வந்து விட்டுவீட்டீர்கள்.
திரிணாமுல் தலைமையிலான அரசே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போதே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு வந்திருக்காது. தேர்தலுக்காக தற்போது வந்துள்ள அந்நியர்கள், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது எங்கிருந்தார்கள்? ஏன் அப்போது வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!