India
வேளாண் சட்ட நகலை எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள் : தொடரும் போராட்டம்... மவுனம் காக்கும் மோடி அரசு!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 120 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் தொடர்ந்து மோடி அரசு அராஜக போக்கையே கையாண்டுவருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் அராஜகத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்ற நோக்கத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு எதிராக விவசாயச் சங்கத் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக டெல்லி விவசாயிகளின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்வீந்தர்சிங் கோல்டன், பா.ஜ.கவையும், அ.தி.மு.க அரசின் விவசாய நாடகத்தை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஹோலி பண்டிகைக்காக வட இந்திய மாநிலங்கள் களைகட்டியுள்ள நிலையில், வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகலை எரித்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடியதாக விவசாயச் சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதார விலைக்குப் புதிதாகத் தனிச் சட்டம் இயற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !