India

இந்தியாவில் உயரும் கொரோனா : பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மோடி அரசு!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் வரை குறைந்து வந்தது. ஆனால், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக, குஜராத், தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச்வருகிறது. நேற்று 40 ஆயிரம் என்று பாதிவான கொரோனா எண்ணிக்கை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 47,262 ஆக பதிவாகியிருக்கிறது. கொரோனா தொற்றால் இந்தியாவில் ஒரேநாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது மக்களை மேலும் அச்சப்படுத்தியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 28,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 132 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு நேற்று புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தினசரி தொற்று ஆயிரத்தைக் கடந்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோவை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பேட்டிங் சொதப்பினாலும் பவுலிங்கில் அசத்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!