India
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை வெட்டியெறிந்த பெண்!
மத்தியபிரதேச மாநிலம், உமரிஹா கிராமத்தில் கடந்த வியாழனன்று கணவர் வெளியூர் சென்றுவிட்டதால், மனைவி தனது மகனுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திருடனைப் போல் வந்துள்ளார்.
இதையடுத்து, வீட்டில் திருடத்தான் வந்துள்ளார் என நினைத்து, அந்த பெண்மணியின் மகன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை அழைத்து வருவதற்காக வெளியே வந்துவிட்டார். அப்போது, அந்த மர்ம நபர் அந்த பெண்மணி மீது பாய்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்மணி, அவரிடமிருந்து தப்பிப்பதற்காகப் போராடினார். அப்போது கட்டிலின் கீழ் இருந்த அரிவாளை எடுத்து, அந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்துள்ளார். பின்னர் அவரிடமிருந்து தப்பிய பெண்மணி அருகே உள்ள காவல்நிலையத்தில், நடந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்மணியின் வீட்டில், காயங்களுடன் போராடிக்கொண்டிருந்த நபரை மீட்டு, முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!