India
ஆன்லைன் திருட்டை தடுக்க புதிய விதிகளை அறிமுகம் செய்யவிருக்கும் ரிசர்வ் வங்கி... என்னென்ன தெரியுமா?
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டு வருவதைத் தடுப்பதற்காக புதிய விதிமுறைகளை ஆர்.பி.ஐ வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தப்போகும் அந்த விதிமுறைகள் என்னென்ன என்பதை இங்கு நாம் பார்ப்போம். அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி போன்ற வலைதளங்களுக்குச் செல்லும்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்வோம். பொதுவாக இந்த விவரங்களைப் பதிவு செய்ய நேரம் எடுப்பதால், விவரங்கள் அனைத்தையும் இ காமர்ஸ் வலைதளங்களில் சேமித்து வைத்து, பிறகு அடுத்த முறை ஷாப்பிங் செய்யும்போது, விவரங்களைப் பதிவு செய்யாமல் OTP எண்களை மட்டுமே பதிவ செய்து ஷாப்பிங் செய்து வருகிறோம்.
இதனால் வங்கி விவரங்களும், பணமும் திருடப்படுவதாக வங்கியிலிருந்து ஆர்.பி.ஐக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் ஏ.டி.எம் மற்றும் கிரெடிக் கார்டு விவரங்கள் திருடப்படுவதைத் தடுக்க ஆர்.பி.ஐ புதிய விதிமுறைகளை அறிமும் செய்ய உள்ளது.
அவை என்னவென்றால், இனி ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும், ஏ.டி.எம். கார்டில் இருக்கும் 16 இலக்க எண்கள், பெயர் மற்றும் கார்டு காலாவதியாகும் தேதி என அனைத்து விவரங்களையும் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.
"இ-காமர்ஸ் வலைதளங்களில் நாம் கொடுக்கும் தகவல்கள் திருடப்படாது என யாராலும் நூறு சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியாது. எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், அதையும் மீறி ஹேக்கர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டி விடுகிறார்கள். இதனால்தான் ஆர்.பி.ஐ ஒவ்வொரு முறையும் விவரங்களைப் பதிவு செய்யச் சொல்கிறது. இது திருட்டை குறைக்க வழி வகுக்கும்” என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!