India
மே.வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல்: பா.ஜ.கவின் விருப்பப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா?- மம்தா ஆவேசம்!
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதியை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதில், தமிழகம், கேரளம், புதுச்சேரிக்கு ஒரே கட்டமாகவும், அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என சுனில் அரோரா கூறினார்.
இதையடுத்து, மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இத்தனை கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான மம்தா பானர்ஜி செய்தியார்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல்?
தேர்தல் ஆணையமே மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்றால் மக்கள் எங்கே செல்வார்கள். பா.ஜ.க-வின் விருப்பப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக?, மேற்கு வங்கத்தில் மோடியும், அமித் ஷாவும் விரிவாக தேர்தல் பரப்புரை செய்ய வசதியாகவே 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் ஏதேனும் தவறான திட்டங்கள் உள்ளதா என என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!