India
அயோத்தி ஏர்போர்ட்டுக்கு ராமர் பெயர் வைக்க 101 கோடி; கோவிட் தடுப்பூசிக்கு 50 கோடி - யோகி அரசின் ஓரவஞ்சனை!
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்காக மாநில பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கிவிட்டு அயோத்தியில் விமான நிலையம் கட்டுவதற்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநில வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஐந்தரை லட்சம் (5,50,270.78) கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் காகிதமில்லாத நிதி நிலை அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில், அயோத்தியை புணரமைப்பதற்காகவும், சீரமைப்பதற்காகவும் 640 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் ராமர் கோயில் கட்டுவதற்காக மட்டுமே 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வாரணாசி, அயோத்தி சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக தலா 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம்’ என பெயரிடுவதற்கு 101 கோடி ரூபாயும், மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 50 கோடி, லக்னோவில் பழங்குடி அருங்காட்சியகம், ஷாஜகான்பூரில் சுதந்திர போராளிகளின் கேலரி அமைக்க 8 மற்றும் 4 கோடியும் என குறைவான அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!