India
கரையான்களுக்கு இரையான சொந்த வீடு கனவு.. ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த பன்றி வியாபாரி.. ஆந்திராவில் சோகம்!
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது மயிலாபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிஜிலி ஜமாலயா என்பவர் பன்றி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது நெடுநாள் கனவாக இருந்தது.
இதற்காக பிஜிலி ஜமால்யா தனது ஆடம்பர செலவுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பன்றி வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தின் சிறு பகுதியை மனைவியிடம் கொடுத்து சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார். இந்த பணத்தை ஒரு பழைய இரும்பு பெட்டியில் வைத்து சேமித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வியாபாரத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை இந்த இரும்பு பெட்டியில் வைப்பதற்காக, பெட்டியைத் திறந்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இவர் பல மாதங்களாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தையும் கரையான்கள் அரித்திருப்பதைக் கண்டு, அப்படியே சத்தமாக அழுத படி தரையில் சரிந்து விழுந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் பிஜிலி ஜமால்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது "பிஜிலி ஜமால்யா வீடு கட்டுவதற்காகச் சேமித்து வைத்திருந்த பணம் என்றும், எங்களிடம் வங்கி கணக்கு இல்லாததால் பழைய இரும்பு பெட்டியில் பணத்தைச் சேமித்து வந்ததாகவும்" போலிசாரிடம் அவர் கூறினார். பின்னர் போலிஸார், "முறைகேடு பணமாக இல்லாமல் இருந்தால் உங்களுக்கு உதவுவதாக" அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!